கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
உங்களது காருக்கான இன்சூரன்ஸை நீங்கள் ஆன்லைனில் வாங்க விரும்பினால், சோழா எம்எஸ் இன் இணையதளத்திற்குச் சென்று கார் இன்சூரன்ஸிற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அடுத்தப் பக்கத்தில் உங்களின் வாகனத் தகவல் குறித்து கேட்கப்படும், அதைப் பூர்த்திசெய்த பின்னர், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து கேட்கப்படும். பின்னர், நீங்கள் போதுமான அளவில் ஆட்-ஆன் காப்பீட்டு விருப்பங்களைப் பெறுவீர்கள். மேலும் உங்களின் தேவைக்கேற்ற விருப்பத்தைத் தேர்வுசெய்து அதற்கான பிரீமியத்தைச் செலுத்தவும்.
கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் அதே முறையிலேயே, சோழா எம்எஸ் வலைதளம் சென்று முந்தைய கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கலாம். இந்த முறையின் மூலம், சோழா எம்எஸ் வலைதளத்தில் கார் இன்சூரன்ஸ் புதுப்பித்தலை மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.
கார் இன்சூரன்ஸ் பாலிசியின் வகைகள்
மூன்று வகையான கார் இன்சூரன்ஸ் வகைகள் உள்ளன
விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசி
விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசியானது உங்களின் காருக்கான ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டமாகும், இது மூன்றாம் தரப்பு கார் இன்சூரன்ஸில் அடங்கிய அனைத்துக் காப்பீடுகள் மட்டுமின்றி, தீ, வன்முறை, மரம் மற்றும் ஆலங்கட்டி மழை விழுதல் உள்ளிட்ட சேதங்களில் இருந்தும் உங்களின் காரைப் பாதுகாப்பதற்கான காப்பீடுகளையும் கொண்டது.
மூன்றாம்-தரப்பு பொறுப்பு கார் இன்சூரன்ஸ் பாலிசி
ஏதேனும் விபத்தில் உங்களது கார் சிக்கினால், இந்தப் பாலிசியானது சட்டப்பூர்வக் கடமைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி, வாகனங்களுக்கு இந்திய சாலைகளில் மூன்றாம்-தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் இயக்கப்படும் கார் சட்டவிரோதமாகக் கருதப்படும்.
மதிப்பிழப்பு கருத்தில் கொள்ளப்படாத கார் இன்சூரன்ஸ்
மதிப்பிழப்பு கருத்தில் கொள்ளப்படாத கார் இன்சூரன்ஸ், உங்களது காருக்கான அதிகபட்ச இழப்பீட்டைப் பெறுவதற்கு துணை செய்கிறது. இன்வாய்ஸ் மதிப்பில் வாகனம் காப்பீடு செய்யப்படுவதால், இழப்பு என்பதற்கு இடமில்லை.